Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயிற்றில் பிரச்னையா.. போயே போச்சு! கோயில்களை வலம் வந்து வணங்க வேண்டிய முறை! கோயில்களை வலம் வந்து வணங்க வேண்டிய ...
முதல் பக்கம் » துளிகள்
முத்துக்குமார சுவாமிக்கு அரோஹரா!
எழுத்தின் அளவு:
முத்துக்குமார சுவாமிக்கு அரோஹரா!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
01:04

சென்னையிலுள்ள, தரும மிகு கந்த கோட்டத்தில் அருள் புரியும் முருகன் கோவிலில், ஒரு சமயம், அடியார்கள் எல்லாம் கூடி, நம் கோவிலுக்கு உற்சவ விக்ரகம் வேண்டும்... என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர திறமைசாலிகளைக் கொண்டு, பஞ்சலோகத்தில், உற்சவ விக்ரகம் ஒன்றை வார்த்து முடித்தனர். பின், வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம், பளபளவென மின்னி, ஒளி வீசியது. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு பிசிறுகள் இருந்தன. இதனால், அனைவரும் தலைமை சிற்பியைப் பார்க்க, அவர், இந்தப் பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன்... என்று சொல்லி, விக்ரகத்தை நெருங்க, அடுத்த நொடி, உடலில் தீப்பற்றியதைப் போல துடிதுடித்து, அப்படியே தரையில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த சிற்பி, கண்களில் மிரட்சியோடு கைகளைக் கூப்பி, இந்த விக்ரகம் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது; இதை தூய்மையாக்க எனக்கு சக்தி இல்லை; என்னை விட்டு விடுங்கள்... என்றார்.

பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை வைத்து, வழிபாடு செய்யக் கூடாது என்பதால், விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்தனர். இரண்டு ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், காசியில் இருந்து சாம்பையர் என்ற துறவி, கந்த கோட்டத்திற்கு வந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின், ஆர்வத்தோடு உற்சவரைத் தேடி, அதுகுறித்து கோவில் பணியாளர்களிடம் கேட்டார். அவர்கள் நடந்ததை கூறினர். கோவில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர், அந்த உற்சவரை பார்க்க வேண்டும்... என்றார். அவருடைய தோற்றத்தில் கட்டுப்பட்ட நிர்வாகிகள், உற்சவர் இருந்த அறையைத் திறந்தனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர், சில நிமிடத்தில் வெளியே வந்து, உடல் சிலிர்க்க, நீங்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள்... இக்கோவிலில் உள்ள மூலவருக்கு உள்ள அதே சான்னித்தியம், இந்த உற்சவ மூர்த்தத்திலும் உள்ளது. இவ்வாறு அமைவது வெகு அபூர்வம். தன்னை வழிபடும் அடியார்களுக்கு அளவிலா செல்வத்தை வழங்குவார் இந்த உற்சவர். இவரைத் தியானம் செய்யலாமே தவிர, இவர் திருமேனியில் எந்த விதமான ஆயுதங்களும் படக் கூடாது. இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன்... என்றார்.

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்ற நிர்வாகிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில், உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு, திரை போட்டு மறைக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து, வேத மந்திரங்களைச் சொல்லி, ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலகியதும் அனைவரும் பரவசத்தோடு, முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா... எனக் கூறினர். ஆறுமுகனின் அருளாடல் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்தில் தரிசிக்கலாம்! வள்ளலாருக்கும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும், பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி, நமக்கும் அருள் புரிவார்!

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar