கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மூல நட்சத்திரத்தன்றும், புதன்கிழமை மற்றும் பவுர்ணமியன்றும் விரதம் இருந்து பழகலாம். தங்கள் கல்வி அபிவிருத்தி வேண்டி சரஸ்வதி மற்றும் புதன் பகவானை மனதில் நினைத்து தங்கள் கல்வி அபிவிருத்திக்காக விரதம் இருக்கலாம். அன்று காலையில் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து விரதம் துவங்க வேண்டும். அன்று எளிய உணவு சாப்பிடலாம். நவக்கிரக மண்டபத்தில் உள்ள புதனை வணங்க வேண்டும். சரஸ்வதி குறித்த பாடல்களைப் பாட வேண்டும். வரும் ஆண்டிற்குரிய பாடங்களை திருப்பிப் பார்க்க வேண்டும். விரதம் துவங்கும் நாள் முதல் ‘டிவி’ பார்க்காமல் இருக்கவும், நேரத்தை பொன்போல் போற்றவும் உறுதியெடுக்க வேண்டும். முடிந்தால், பள்ளி நாட்களிலும் இந்த விரதத்தை தொடருங்கள். அடுத்த ஆண்டு மாநில ரேங்க் ‘வின்னர்களில்’ நீங்களும் ஒருவராகும் வாய்ப்பைப் பெற்று விடுவீர்கள்.