பதிவு செய்த நாள்
02
மே
2016
01:05
முருகனின் ஐந்தாம் படைவீடாக குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணி அமைந்திருக்கிறது. பொதுவாக, ‘குன்றுதோறாடல்’ என்பது முருகன் இருக்கும் மலைகள் அனைத்தையும் குறிக்கிறது. அருணகிரிநாதர் தன் திருப்புகழில் வள்ளிமலை, மயிலம், விராலிமலை, குன்றக்குடி, திருச்செங்கோடு, கதிர்காமம், கயிலை, திருக்கழுக்குன்றம், ரத்தினகிரி, திருச்சிராப்பள்ளி, விநாயகமலை, கொல்லிமலை, ராஜகம்பீரன் மலை, கொங்கணகிரி, கழுகுமலை, பிரான்மலை, பொதிகைமலை, திரிகோணமலை ஆகிய தலங்களையும் குன்றுதோறாடல் என்றே கூறுகிறார். ஆனால் ‘வரையிடங்களில் சிறந்தது தணிகைமால் வரையே” என்று கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் குறிப்பிடுகிறார். ‘வரை’ என்றால் ‘மலை’ திருத் தணியே குன்று தோறாடல் தலங்களில் சிறந்தது என்பது அவரது கருத்து. தேனி அருகிலுள்ள சுருளிமலை, வைத்தீஸ்வரன் கோவில் (முத்துக்குமார சுவாமி சன்னிதி) ஆகியவையும் குன்றுதோறாடல்களாகக் கருதப்படுகிறது.