திருமலையானுக்கு தினமும் நடைபெறும் நைவேத்தியம் எது தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2016 02:05
தினந்தோறும் காலையில் சஹஸ்ரநாம அர்ச்சனை ஆனவுடன் திருமலையானுக்கு நைவேத்தியம் நடைபெறும். லட்டு, வடை, தயிர்சாதம், புளிச்சாதம், பொங்கல் போன்ற பிரசாதங்கள் நைவேத்தியம் செய்வர். முதல் நைவேத்தியத்தினை முதல் மணி என்று அழைப்பர். மதியம் நடைபெறும் நைவேத்தியம் இரண்டாம் மணி என்று அழைப்பர். இரவு நடைபெறும் நைவேத்தியம் மூன்றாம் மணி அல்லது இரவு மணி என்பர். இரவு ஏகாந்த சேவைக்கு முன்னர் “திருவீசம்” மணி என்னும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் நைவேத்தியம் செய்வர். அதைத் தொடர்ந்து சன்னிதி பாஷ்யகாரருக்கு நைவேத்தியம் செய்வர். இந்த நிவேதனங்கள் எல்லாம் ஏகாந்தமாக நடைபெறும்.