எலுமிச்சை, பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றில் விளக்கு ஏற்றுவது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2016 05:05
தவறு. விளக்கு ஏற்றுவது என்பது உலோகங்களிலோ, மண் அகல்களிலோ அல்லது மாவினால் பிசையப்பட்ட உருண்டைகளிலோதான் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம், பூசணிக்காய், தேங்காய் என்பவை எல்லாம் பகவானுக்கு பலி கொடுக்கக் கூடிய வஸ்துகள். தேங்காய் என்பது சாத்வீகமான பலி அது. முக்கண்ணோடு சிரஸாக பிரகாசிக்கிறது. பகவானுக்கு நாம் நம்மை சமர்ப்பணம் செய்வது என்பது போல் தேங்காயை சமர்ப்பிப்பது. இன்னும் சில தேவதைகளுக்கு பூசணிக்காய், எலுமிச்சை போன்றவை பலியாகக் கொடுக்கப்படுகிறது. வாழைப்பழம் பகவானுக்கு நிவேதனம் செய்யக்கூடியது. இவற்றில் எல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் என்று எந்தப் புத்தகத்திலும் சொல்லப்படவில்லை. இவை எல்லாம் பலிகொடுக்கக்கூடிய ஸ்தானங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.