எந்த பொருளாக இருந்தாலும் அவற்றில் உயர்ந்தது என்று ஒன்று இருக்கும். இடம்புரி சங்குகள் நிறைய கிடைக்கும். வலம்புரி சங்குகள் அரிதாகவே கிடைக்கும். இடமாக இருப்பதைவிட வலமாக இருக்கும் எல்லாமே சிறப்புடையவை. வலம்புரி விநாயகர்கூட சிறப்பு பெற்றிருக்கிறார். நினைத்த செயல்களை முடித்து தரும் சக்தி இவ்வகை பொருட்களுக்கு உண்டு. இன்னொரு விஷயம்... எல்லாரும் அதிகம் விரும்புகிறார்கள் என்பதால் இவற்றிலும் போலிகள் மலிந்து வருகின்றன. கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.