Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் விளக்கேற்றுவதால் ஏற்படும் ... பள்ளி கொண்ட  கோலத்தில் அருளும் அனுமன்! பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் ...
முதல் பக்கம் » துளிகள்
கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு!
எழுத்தின் அளவு:
கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு!

பதிவு செய்த நாள்

10 மே
2016
02:05

கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.

வசையில் நான்மறை கெடுத்த
அம்மல ரயற்கருளி முன்பரி முகமாய்
இசைகொள் வேதநூ லென்றிலை
பயந்தவனே எனக்கருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்
திருவெள்ளறை நின்றானே!

எனக் கூறப்பட்டுள்ளது. பரிமுகன், அஸ்வ சிரவா என்றும் ஹயக்ரீவரை அழைப்பதுண்டு. முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார். தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார். அதற்கு உதவ வேதங்கள், தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்தச் சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மதேவன் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்தார். அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர். சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்டுக்கொடுக்குமாறு திருமாலிடம் வேண்டினார். மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார். பின்னர் சுவடிகளைத் திருடிய அரக்கர்களைக் கொன்றார். வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர், வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.

(தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.)

இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை அகலும்.

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்.

உடுப்பியில் பிறந்த வாதிராஜதீர்த்தர் (1480-1600) என்கிற மத்வ மடாதிபதி, தினமும் தனது தலைக்குமேல் தட்டில் இறைவனுக்கு படைக்கவேண்டிய நைவேத்தியத்தை வைத்துக்கொள்வார். வெள்ளை குதிரை வடிவில் ஹயக்ரீவர் அவருக்குப் பின்புறம் வந்து தோள்கள் மீது இரண்டு முன்னங்கால்களை வைத்து நைவேத்தியத்தை உண்பார்.

ஞான வடிவான ஹயக்ரீவரை வழிபட கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் செல்லலாம். இந்த தலம் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதே போன்று சென்னை-செங்கல்பட்டு பிரதான சாலை அருகே இருக்கும் செட்டிபுண்ணியம் எனும் இடத்தில் ஹயக்ரீவர் கோயில் உள்ளது. மைசூரில் இருக்கும் புராதன பரகால மடத்தில் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் உள்ளது. இம்மூர்த்தியை இராமானுஜர், சுவாமி தேசிகன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். வித்யா ஸ்வரூபனான ஹயக்ரீவரைக் குறித்து முப்பத்தியிரண்டு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை சுவாமி தேசிகன் எழுதியுள்ளார். இதைச் சொன்னால் நல்ல ஞானம் வரும். முடிந்தளவுக்கு சிறு வயதிலேயே ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். மாணவ - மாணவிகள் தினமும் பக்தியுடன் ஹயக்ரீவரை வணங்கினால் அது நிச்சயம் நல்ல பயனைக் கொடுக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar