Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரச மரத்தை சுற்றுவதால் என்ன நன்மை? கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு! கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » துளிகள்
வீட்டில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!
எழுத்தின் அளவு:
வீட்டில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!

பதிவு செய்த நாள்

09 மே
2016
06:05

வீட்டில் தினசரி விளக்கேற்றினால் நம் வாழ்வில் வளம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்தால் திருமகள் நம் வீட்டில் நிலைத்திருப்பாள். குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். தாமரை போன்ற ஆசனம் பிரம்மா, நெடிய தண்டு திருமால், நெய்யேந்தும் அகல் ருத்ரன். திரிமுனைகள் மகேஸ்வரன். நுனி சதாசிவனைக் குறிக்கும். திரியானது பிந்துவையும், சுடரானது திருமகளையும் தீப்பிழம்பானது கலை மகளையும், ஜோதி பார்வதியையும் குறிக்கும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் குத்துவிளக்கு துலக்கிட கண்பிணி தீரும். திங்கள் துலக்கிட மனம் ஒரு நிலைப்படும். வியாழன் துலக்கிட மனக்கவலை தீரும். சனிக்கிழமை துலக்கிட வாகன விபத்து வராது. செவ்வாய், வெள்ளி, விளக்கு துலக்கக் கூடாது.

குத்து விளக்கை நுனிவாழை இலை விரித்து அதன் மேல் அரிசி இட்டு ஓர் தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும். அடிப்பாகத்தில் பூச்சூட்டும்போது ஈன்ற தாயை நினைத்துப் பூச்சூட்டவேண்டும். நடுப்பகுதியில் ஈன்ற தந்தை, கணவனை நினைத்து பூச்சூட்ட வேண்டும். உச்சிப்பகுதியில் பூச்சூட்டும்போது ‘சதாசிவா, நிரந்தரமாய் நின் நினைவைக் கொடுப்பாய்’ என்று எண்ணி பூச்சூட்ட வேண்டும். முப்பெரும் தேவர்கள் தேவியர்களை மனதார தியானித்து சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரிபோட வேண்டும்.

ஒரு முகம் ஏற்றுவது உகந்ததல்ல. இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரரால் சுகம் ஏற்படும். நான்கு முகம் ஏற்றினால் ஆவினங்களுக்கு நல்லது. ஐந்து முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். கன்னிப் பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்திட நல்ல கணவன், சிறந்த இல்வாழ்க்கை புத்ரசம்பத்து கிடைக்கும். சுமங்கலிகள் குத்துவிளக்கு பூஜை செய்திட மாங்கல்ய பலம் ஏற்படும். அஷ்டலட்சுமி அருளால் வீட்டில் சர்வ சவுபாக்கியங்கள் கிடைக்கும்.

விநாயகர் துதி, திருவிளக்கு வழிபாடு - அகவல், லக்ஷ்மி அஷ்டோத்திரம், 108 லட்சுமி போற்றி ஆகியவை சொல்லி தீபத்துக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். மங்கள ஆரத்திக்குப் பின் பிரதட்சணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். இறுதியாக, ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். புனர் பூஜை செய்து பின் வணங்க வேண்டும். தீபவழிபாடு செய்பவருக்கு லட்சுமி கடாட்சமும், முக்தி, எனும் பிறவா நிலையும் சித்திக்கும் எனப் பெரியோர்கள் அருளியுள்ளனர்.

அறிவியல் விளக்கம்: தீபம் ஏற்றி வழிபடுவதால் இல்லமும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன. தீபம் எரியும்போது வரும் நல்லெண்ணெய் வாசம் சுற்றுப்புறத்தை தூய்மையாக்குகிறது. மனம் ஒன்றி வழிபடுவதால் தியானம் செய்த பலன் கிடைக்கிறது. ஐந்துமுக தீபம் ஏற்றி குத்துவிளக்கு பூஜை செய்வதால் பஞ்ச பூதங்களும் சமநிலை அடைகின்றன. கோயில்களில் கூட்டு வழிபாடாக திருவிளக்கு பூஜை செய்திட ஒற்றுமை ஓங்குகிறது. இறையாற்றல் நிறைகிறது. ஊரெங்கும் தெய்வீக ஆற்றல் துலங்குகிறது. அதனால் நாடும், வீடும், உலகமும் சுபிட்சமடைகின்றன.

 
மேலும் துளிகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar