பதிவு செய்த நாள்
21
மே
2016
03:05
தஞ்சாவூரில் உள்ள 24 பெருமாள் கோவில்களில் கருடசேவை நிகழ்ச்சி வைகாசி திருவோணத்தன்று (மே 28) நடக்கிறது. இதை தரிசித்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். 24 கருடசேவை: கருடசேவையன்று காலை 6.00 மணிக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 24 பெருமாள் கோவில்களில் இருந்து உற்ஸவர்கள், வெண்ணாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருவர். தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள், நரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜர், வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேசர், கரந்தை யாதவ கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மர், கொண்டிராஜபாளையம் கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜர், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசர், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசுவாமி, எல்லையம்மன் கோவில் தெரு ஜனார்த்தனர், கோட்டை பிரசன்ன வெங்கடேசர், கோவிந்தராஜர், மேல அலங்கம் ரங்கநாதர், மேலராஜ வீதி விஜயராமர், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணர், மா.சாவடி நவநீதகிருஷ்ணர் மற்றும் பிரசன்ன வெங்கடேசர், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி, சுக்காந்திடல் லட்சுமி நாராயணர், கரந்தை வாணியந்தெரு வெங்கடேசர், கொள்ளுப்பேட்டை தெரு வேணுகோபாலர் ஆகிய கோவில்களில் இருந்து சுவாமிகள் கருடவாகனத்தில் எழுந்தருள்கின்றனர். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ராமானுஜ தர்சன சபை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பாக விழா நடத்தப்படுகிறது.