சுபநிகழ்ச்சிகளை வளர்பிறையில் நடத்த விரும்புவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2016 03:05
உத்தமம் சுக்லபட்சம் (வளர்பிறை) மத்யமம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்பார்கள். சாத்திரங்கள் வளர்பிறையை சிறப்பானதாகக் கூறுகின்றன. பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் தெரியும் நாட்களில் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகள் சூரிய சந்திரர்களின் சாட்சியாக செய்யப்படுவதாக பொருள்படும். இதனால் வளர்பிறை நாட்களை தேர்ந்தெடுத்தனர். தேய்பிறையில் சந்திரன் தெரிவதில்லை என்பதால் தவிர்க்கிறார்கள். ஆனால், இந்நாட்களிலும் சில விதிவிலக்குகளை ஜோதிடசாஸ்திரம் கூறியுள்ளது. ஜோதிடர்களிடம் நேரில் தெரிந்து கொள்வது நல்லது.