அங்கிங்கெனாதபடி எங்கும் பரிபூரணமாக வியாபித்திருக்கும் அம்பிகை, தனக்கென தனியே உருவமும் பெயரும் இல்லாதவள். என்றாலும் அன்பர்கள் மீது கொண்ட கருணையால், அவள் பல வடிவங்களைத் தாங்கி வந்து அவர்களுக்கு அருள்பாலிக்கிறாள். கவுரி என்பது அவளுக்குப் பொதுப்பெயராகும். பெருமான் அவளை உமா என்று அழைத்தார். இந்தத் திருப்பெயராலேயே அம்பிகை தேவராத்துள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குறிக்கப்படுகின்றாள். கல்வெட்டுக்கள் அவளை உமா என்றும் உமாபட்டாரகி என்றும் அழைக்கின்றன. சிவன்கோயில்களில் அவள் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டு எழுந்தருளியுள்ளாள். அந்தத் திருநாமங்கள்..
மேலும் திருத்தலங்களின் பெயர்களையும் தனது திருநாமத்தில் கொண்டு அம்பிகை அருள்பாலிப்பது உண்டு. மதுரையின் ஆதிப் பெயர் கடம்பவனம். ஆதலால், மீனாட்சி அம்மையை கடம்பவனப் பூங்குயில் என்றும் போற்றுவர். அதேபோல், திருமயிலை கற்பகாம்பிகையை புன்னைவனப் பூங்குயில் எனப்போற்றுவர். கோகிலம் என்பது குயிலாகும். இதையொட்டி திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அம்பிகைக்குக் கோகிலாம்பிகை என்பது பெயராயிற்று. அறுபது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 60 திருநாமங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. இத் திருநாமங்களைச் சொல்லி அம்பிகை மீது மலர் தூவு அல்லல்கள் நீக்கும் செல்வம் பெருகும்.