பசுதானம் மட்டுமல்ல!
பசுவை பராமரிப்பதே மிக உயர்ந்த விஷயம் தான். இந்த கலியுகத்தில் பசுக்கள்
குப்பை மேடுகளில் திரிகின்றன. பாலிதீன் பைகளில் போடப்படும் கழிவுகளை
உண்கின்றன. இப்படி செய்வதெல்லாம் மகாபாவம். வெயில் அளவுக்கு மீறி
கொளுத்துகிறது என்றால், இது÷ பான்ற பாவங்களைச் செய்வதால் தான்!
தாய்ப்பாலுக்கு பிறகு மனிதன் கடைசி வரை பசும்பாலையே நம்பியிருக்கிறான்.
இறந்த பிறகும் கூடஅவனுக்கு பால் தான் ஊற்றுகிறார்கள். தாயில்லாத
பிள்ளைகளுக்கு பசும்பால் தான் உயிர் காக்கும் மருந்து. இப்படிப்பட்ட அரிய
உயிரினத்தை பாதுகாப்பது நம் கடமை. இதை தானம் கொடுக்கும் போது நல்ல மாடாக
கொடுக்க வேண்டும். கடமைக்கு தானம் செய்தால் அதை அடிமாட்டுக்கு விற்று
விடுவார்கள். இது பாவத்தை மேலும் அதிகரிக்கும். பசுக்களை கண்ணியமான
மடங்களுக்கு தானம் செய்யுங்கள். அவர்கள் அதை இறக்கும் வரை
பராமரிப்பார்கள்.