வால்மீகி வியாசருக்கு உபதேசித்தது புராண சூத்திரங்கள் ஆகும். திங்களன்று வரும் சிவராத்திரி யோக சிவராத்திரி எனப்படுகிறது. ருத்ரகோடி என்பது திருக்கழுக்குன்றத்தின் இன்னொரு பெயர் ஆகும். நீபவனத்திருத்தலம் என்பது மதுரையின் வேறு பெயர் ஆகும். வன்னி இலை சமீபத்திரம் என்று அழைக்கப்படுகிறது. போர் முறைகளைப் பற்றி தனுர் வேதம் உரைக்கிறது. இசையைப் பற்றி கந்தர்வ வேதம் உரைக்கிறது. 23 வருணன் அத்த புத்திரன் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி மலை தலம் அநாகதம் ஆதாரத்தைக் குறிப்பிடுகிறது. திருத்தணி தலம் விசுத்தி ஆதாரத்தைக் குறிப்பிடுகிறது. கந்தர் சஷ்டி கவசத்தை இயற்றியது தேவராய சுவாமிகள் ஆவார். விநாயக புராணத்தின் வேறு பெயர் பார்க்கவ புராணம் ஆகும். கோயில் தான நிலம் தேவதானம் எனப்படுகிறது. கோயில் பிரகாரம் திருமாளிகை எனப்படுகிறது. கோயில் மூர்த்தி அலங்காரச் செலவு சாத்துபடி எனப்படுகிறது.