சிவாலயங்களில் பலிபீடத்திற்குப் பின் நந்தி அமைக்கப்பட்டிருக்கும். பலிபீடத்துக்கு பத்ரலிங்கம் என்று பெயர். நந்தி ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மாவிலுள்ள ஆணவமலம் அந்த பத்ரலிங்கத்திற்குப்பின் ஒதுங்கியிருக்கிறது. நாம் பத்ரலிங்கத்திற்கு அருகில் சென்றதும் நம்மிடமுள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்றையும் பலியிட வேண்டும்.