அர்ப்பணம் என்றால் கொடுப்பது, சமர்ப்பணம் என்றால் சம்யக அர்ப்பணம். அதாவது, நன்றாகக் கொடுத்தல், சிலர் கையால் கொடுப்பார்கள். மனசினால் கொடுக்க மாட்டார்கள். மனசு அதைக் கொடுக்கணும் என்று நினைக்காது. வேறு வழியின்றி, கையால் கொடுப்பார்கள். அப்படி இருக்கக் கூடாது. கையாலேயும் கொடுக்கணும். மனசினாலேயும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யக்கூடிய தானத்துக்கு சமர்ப்பணம் என்று பெயர்.