பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
செஞ்சி: இஞ்சிமேடு, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 7ம் தேதி, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
மறுநாள் (8ம் தேதி) காலை 7:௦௦ மணிக்கு, ரக்ஷாபந்தனம், வாஸ்து ஹோமம், விசேஷ ஹோமம், மாலை 6:௦௦ மணிக்கு, ஜலதிவாசம், சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமம் நடந்தது. மறுநாள் 9ம் தேதி காலை 8:௦௦ மணிக்கு, விசேஷ ஹோமம், மாலை 3:௦௦ மணிக்கு, ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், பரிவார மூர்த்திகளுக்கு 17 கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது; சாமி சிலைகளுக்கு கண் திறப்பு நடந்தது. தொடர்ந்து, 10ம் தேதி காலையில், தெய்வங்களுக்கு விசேஷ திருமஞ்சனம், மாலையில், யாகசாலை பூஜைகளும், நடந்தது.
நேற்று அதிகாலை 5:௦௦ மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:௦௦ மணிக்கு, சதுர்த்தான அர்ச்சனம், 8:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதியும், காலை 9:10 மணிக்கு,யாத்ராதானம், கும்ப புறப்பாடாகியது.பின், 9:30 மணிக்கு, அகோபில மடம் 46வது பட்டம் ஸ்ரீஅழகிய சிங்கர் தலைமையில், அஹோபில மடம் ஆஸ்தான வித்வான் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. ஐந்து நிலை ராஜ÷ காபுரம், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமர், கல்யாண வரத ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை இஞ்சிமேடு ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவில், போளூர் தொகுதி எம்.எல்.ஏ., சேகரன், முன்னாள் அமைச்சர் சின்னைய்யா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாண்டுரங்கன், அன்பழகன், ஹரிகுமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.