திருச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் நாமக்கல் மாவட்டத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது தலைமலை. இங்கு அதிசயிக்கத்தக்க வகையில் மலையுச்சியில் ஒரே பாறையில் அமைந்த நல்லேந்திரப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசியில் இடி தாக்கி, சுவாமி இருக்கும் கட்டடத்தின் மேற்புறத்தில் விரிசல் ஏற்படுவதும்; பிறகு பெருமாளின் திருவருளால் அது ஒன்று சேர்வதும் இன்றும் நடந்து வரும் ஓர் அதிசயம். இதை இடிபகவான் பூஜை என்கின்றனர்.