மைசூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது தலக்காடு. இங்குள்ள ஆலயத்தில் கணபதி குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதியாக போர் வீரனைப் போல வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் எல்லா காரியங்களிலும் ஜெயம் உண்டாகும். பள்ளிக் குழந்தைகள் கல்வி முன்னேற்றத்துக்காக செம்பருத்திப்பூ போட்டு இவரை வணங்குகின்றனர். இவரின் குதிரை வாகனத்தின் கால்களை மறைத்து விட்டுப் பார்த்தால் மூஞ்சுறு போல் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.