சிவாலயங்கள் பூஜை சமயத்தில் சந்நிதியில் பஞ்சபுராணம் பாடுவது மரபு. தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்திலும் ஒவ்வொரு பாடல் பாடுவதே பஞ்சபுராணம் என்பதாகும். பதிகம் பெற்ற தலமாயின் தலப் பதிகம் முடிந்தமட்டில் பாடப்பட வேண்டியது முக்கியம்.