புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 73ம் ஆண்டு பவித்ரோத்சவ விழா வரும் 29ம் தேதி துவக்குகிறது. துவக்க நாளன்று காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 30ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஸ்தாண்டில் மண்டேஸ்வரர் பிரதிஷ்டையோடு கூடிய யாக பூஜை துவங்குகிறது. அக்.,1ம் தேதி, காலை மாலை இரு வேளையும் யாக பூஜை மற்றும் பவித்ர ஸமர்ப்பணை காட்சியும், 4ம் தேதி காலை 10:30 மணிக்கு பவித்ர ஸமர்ப்பணை சிறப்பு யாகம் மற்றும் பூர்ணாஹூதியும், மாலை 7:00 மணிக்கு பிரணவ மூர்த்திக்கு பஞ்ச முகார்ச்சனையுடன் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, தங்கத் தேர் புறப்பாடு நடக்கிறது.