ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டார் ஆதிகசேவப் பெருமாள் (கன்னியாகுமரி மாவட்டம்), கும்பகோணம் ஆராவமுதன் ஆகிய பெருமாள்கள் சயன நிலையில் உள்ளவர்களில் மிகவும் உயர்ந்த அம்சம் பெற்றவர்கள். இந்த விக்ரகங்களின் முகம் சற்று திரும்பி, பக்தர்களைப் பார்ப்பது போல் இருக்கும். ரங்கநாதர் மேற்கே தலை வைத்து தெற்கு பார்த்து முகத்தை திருப்பியிருப்பார். அதாவது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி தெற்கே தலை வைத்து கிழக்கு நோக்கி முகம் காட்டுவார். இதில் இருந்து நாம் படுக்கும் போது மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் தலை வைப்பது சிறந்தது என்பது தெளிவாகிறது. இத்தலங்களில் பெருமாளின் கரம் ஓரளவே உயர்த்தி ஆசி வழங்குவது போல இருக்கும். காஞ்சிபுரம் திருவெஃகா சயனப்பெருமாள் மேற்கு நோக்கி முகம் திருப்பியுள்ளார். இங்கு கையை நன்றாக உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பதைக் காண முடியும். புரட்டாசி சனி நாட்களில் இவர்களை வணங்கி வரலாம்.