பெருமாளை கணவனாக அடைய வேண்டிய ஆண்டாள் திருப்பாவை பாடினாள். அவரை திருமணம் செய்வதாக கனவு கண்டபோது, வாரணமாயிரம்’ எனத்துவங்கும் நாச்சியார்திருமொழி பாசுரம் பாடினாள். திருமண பருவத்தில் உள்ள கன்னிப்பெண்கள், புரட்டாசி சனியன்று, இதிலுள்ள இரண்டு பாடல்களைப் பாடி பெருமாள், ஆண்டாளை வணங்கினால் நல்ல மாப்பிள்ளையும், அறிவில் சிறந்த நல்ல குழந்தைகளும் அமைவர். வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றானென்று எதிர்பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.