புரட்டாசி மாதத்தில் அசைவம் உண்ணாமல் இருப்பதும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதும் தொன்று தொட்டு நடைபெற்று வரும் விஷயங்கள் சமஸ்கிருதத்தில் பாத்ரபத மாதம் என்று அழைக்கப்படும். மாதமே தமிழில் புரட்டாசி என்று பெயர் பெறுகிறது. பல காரணங்களால் இம்மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.
வானியல் காரணங்கள்: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் பிரவேசிக்கிறார். அதோடு புதன் மிகவும் உச்சம் பெறும் மாதமாக புரட்டாசி கணிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்துக்குரிய அதிதேவதை ஆகவும் பிரத்யதி தேவதையாகவும் விளங்குபவர். திருமாலே ஆவார். அதனால்தான் புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஏன் சனிக்கிழமைகள் கொண்டாடப்படுகின்றன? புதனின் நட்பு கிரகம் சனி பகவான் அவரே ஆயுட்காரகர் என்று போற்றப்படுகிறார். அதனால் பெருமாளுக்குரிய மாதங்களில் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறந்த பலனைத்தரும் என்பதால் மக்களை சனிக்கிழமை விரதம் இருக்கத் தூண்டினர் முன்னோர்.
சுற்றுச் சுழல் காரணங்கள்: புரட்டாசி மாதம் என்பது மழைக்கும் வெயிலுக்கும் இடைப்பட்டகாலம் மழையும் இருக்கும் அதே நேரம் வெயிலும் தலைகாட்டும் அதுதான் நோய்க்கிருமிகள் பெருகும் காலம் வயிற்று உபாதைகள் அஜீரணம் வாந்தி பேதி போன்றவை மக்கள் அலைக்கழிக்கும் இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாக வர்ணிக்கிறது. அக்னி புராணம் நோய்களால் மக்கள் துன்புறாமல் இருக்க விரதத்தையும் மனதைத் தூய்மைப்படுத்த இறைவழிபாட்டையும் கூறி மக்களை நெறிப்படுத்தினர். புராணங்களில் புரட்டாசி: புரட்டாசி மாதத்தின் மகிமையைப் பற்றி பல புராணங்கள் கூறுகின்றன. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பக்வத்சலனான பெருமாள் பூலோகத்துக்கு வரும் மாதமே புரட்டாசி என விஷ்ணு புராணம் கூறுகிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் அளப்பரிய பலனைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.