நவராத்திரி ஐந்தாம் நாள் மதுரை மீனாட்சி ராஜமாதங்கி அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சிவனை நோக்கி தவமிருந்த மதங்க மகரிஷி, “-எல்லா உயிர்களுக்கும் தந்தை-யான சிவனே! தங்களை மருமகனாக பெறும் பாக்கியம் வேண்டும்” எனக் கேட்டார். சிவனும் சம்மதித்தார். ஒரு சித்ரா- ப-வுர்ணமியன்று மதங்கர் ஆற்றில் நீரா-டிய போது, தாமரை மல-ரில் ஒரு பெண் குழந்தை மிதக்கக் கண்டார். மா-தங்கி என பெயர் சூட்டி வளர்த்தார். 64 கலைகளையும் கற்றுக் கொ-டுத்தார். பருவ வயது வந்ததும் சிவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். கலைகளின் நாயகியான இவளை ராஜமாதங்கி என்று அழைப்பர். இவளை தரிசித்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
நைவேத்யம்: பால்சாதம், கடலைப்பருப்பு சுண்டல் (பூம்பருப்பு) , சர்க்கரைப் பொங்கல்
பாட வேண்டிய பாடல் ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே.