நவராத்திரி எட்டாம் நாள் ( அக்.9) மதுரை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசுரன் என்பவன் ஒரு பெண்ணைத் தவிர, தனக்கு வேறு யாராலும் அழிவு வரக் கூடாது என்ற வரம் பெற்றான். இந்த வரத்தின் வலிமையால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் ஆதிபராசக்தியை சரணடைந்தனர். அம்பிகை, உக்கிர துர்க்கையாக மாறினாள். சிவன் தன் சூலாயுதத்தையும், விஷ்ணு சங்கு, சக்கரத்தையும் அம்பிகைக்கு வழங்கினர். சிங்க வாகனத்தின் மீது அமர்ந்த துர்க்கை, மகிஷாசுரனுடன் போரிட்டு வென்று ’மகிஷாசுரமர்த்தினி’ என்று பெயர் பெற்றாள். இன்று மீனாட்சியைத் தரிசித்தால் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை
பாட வேண்டிய பாடல்
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கு அலர் ஆகநின்றாய் அறியார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.