பதிவு செய்த நாள்
08
அக்
2016
02:10
பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, சந்தனம் தெளிக்க வேண்டும். அந்த இடத்தில் ஒரு மேஜை இட்டு, அதன் மேல் வெள்ளைத்துணி விரித்து, சரஸ்வதி படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும். இதற்கு வெள்ளைத் தாமரை அல்லது வெள்ளை நிற மலர் மாலை சூட்ட வேண்டும். மேஜை முன் ஒரு சிறிய பெஞ்ச் இட்டு, அதன் ஒருபுறத்தில் புத்தகங்களை அடுக்க வேண்டும். மறுபுறத்தில் வாழை இலை விரித்து, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பொரி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை படைக்க வேண்டும். இலையில் ஒரு புறத்தில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த அம்மனையும் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் நைவேத்யம் செய்து தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதிக்கு பூஜை செய்ய வேண்டும். வசதி உள்ளவர்கள் அர்ச்சகர்களைக் கொண்டு, கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிக்கலாம். பூஜையின் போது கலைவாணிக்குரிய பாடல்களைப் பாட வேண்டும்.