Press Ctrl+g to toggle between English and Tamil
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
முதல் பக்கம் »
துளிகள்
நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள்!
பதிவு செய்த நாள்
08
அக் 2016 04:10
முப்பெருந்தேவியரையும் போற்றும் ஒப்பற்ற நவராத்திரி, அன்று ஒன்பதுநாட்களும் அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள் 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது அம்பாளை பூஜித்து அருள்பெறலாம். 1. கோலம் போடும் பொருள்: அரிசி மாவு கோல வகை: பொட்டு ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பச்சிலை தானம்: சோழி, பொன் பொட்டு: புனுகு ராகம்: தோடி வாத்தியம்: மிருதங்கம் மலர்: வில்வம் நைவேத்தியம்: வெண்பொங்கல் குமாரியின் பெயர்: குமாரி மந்திரம்: ஓம் கௌமார்யை நம: சுவாசிநியின் பெயர்: சைலபுத்ரீ மந்திரம்: ஓம் சைலபுத்திரியை நம: பலன்: துக்கம், ஏழ்மை அகலும். பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும். 2. கோலம் போடும் பொருள்: கோதுமை மாவு கோல வகை: கட்டம் ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பூவாங்கிழங்கு தானம்: வெள்ளி குன்றிமணி பொட்டு: ஜவ்வாது ராகம்: கல்யாணி வாத்தியம்: புல்லாங்குழல் மலர்: துளசி நைவேத்தியம்: புளியோதரை குமாரியின் பெயர்: த்ரிபுரா மந்திரம்: ஓம் த்ரிபுராயை நம: சுவாசிநியின் பெயர்: ப்ரஹ்மசாரிணீ மந்திரம்: ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம: பலன்: தன தான்ய புத்ர பௌத்ர விருத்தி. 3. கோலம் போடும் பொருள்: முத்து கோல வகை: மலர் ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: குங்குமப்பூ தானம்: முத்து, தட்டைபவளம் பொட்டு: கஸ்தூரி ராகம்: காம்போதி வாத்தியம்: வீணை மலர்: மரு நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல் குமாரியின் பெயர்: கல்யாணி மந்திரம்: ஓம் கல்யாண்யை நம: சுவாசிநியின் பெயர் : சந்த்ர கண்டா மந்திரம்: ஓம் சந்த்ர கண்டாயை நம: பலன்: வித்யை, ராஜ்யம், சுகம் கிடைக்கும். 4. கோலம் போடும் பொருள் : அட்சதை (முனை முறியாத முழு அரிசி) கோல வகை: படிக்கட்டு ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பன்னீர் தானம்: பவளம், கிளிஞ்சல் பொட்டு: அரகஜா ராகம்: பைரவி வாத்தியம்: கோட்டு வாத்தியம் மலர்: கதிர் பச்சை நைவேத்தியம்: கதம்பம் குமாரியின் பெயர்: ரோஹிணி மந்திரம்: ஓம் ரோஹிண்யை நம: சுவாசிநியின் பெயர்: ஓம் கூஷ்மாண்டா மந்திரம்: ஓம் கூஷ்மாண்டாயை நம: பலன் : சகல நோய் நொடிகளும் நீங்கும். 5. கோலம் போடும் பொருள்: கடலை கோல வகை: பறவையினம் ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: சந்தனம் தானம்: வைடூர்யம், செப்பு பொட்டு: சந்தனம் ராகம்: பந்துவராளி வாத்தியம்: ஜல்லரி மலர்: சந்தன இலை நைவேத்தியம்: தயிர்சாதம் குமாரியின் பெயர்: சண்டிகா மந்திரம்: ஓம் சண்டிகாயை நம: சுவாசிநியின் பெயர்: ஸ்கந்தமாதா மந்திரம்: ஓம் ஸ்கந்தமாதாயை நம: பலன்: ஐஸ்வர்யம் விருத்தியாகும்; புத்திரப்பேறு அமையும். 6. கோலம் போடும் பொருள்: பருப்பு கோலை வகை: தேவியின் நாமம் ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: வாசனை திரவியம் தானம்: கோமேதகம் பொட்டு: குங்குமம் ராகம் : நீலாம்பரி வாத்தியம்: பேரி வாத்தியம் மலர்: தும்பை இலை நைவேத்தியம்: தேங்காய் சாதம் குமாரியின் பெயர்: காளிகா மந்திரம்: ஓம் காள்யை நம: சுவாசிநியின் பெயர்: காத்யாயினி மந்திரம்: ஓம் காத்யாயின்யை நம: பலன்: எதிரிகள் தொல்லை முழுமையாக விலகும். 7. கோலம் போடும் பொருள்: மலர் கோல வகை: திட்டாணி ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: நலங்கு மஞ்சள் தானம்: புஷ்பராகம் பொட்டு: சாந்து ராகம்: பிலஹரி வாத்தியம்: படகம் மலர்: பன்னீர் இலை நைவேத்தியம்: எலுமிச்சை சாதம் குமாரியின் பெயர்: சாம்பவீ மந்திரம்: ஓம் சாம்பவ்யை நம: சுவாசிநியின் பெயர்: காலராத்ரீ மந்திரம்: ஓம் காலராத்ரியை நம: பலன்: புகழ் கிடைக்கும். 8. கோலம் போடும் பொருள்: காசு கோல வகை: பத்மம் ஸ்நானத்திற்கு உரிய திரவியம்: மருதோன்றி தானம்: மரகதம் பொட்டு: ஸ்ரீசூர்ணம் ராகம்: புன்னாக வராளி வாத்தியம்: கும்மி மலர்: விபூதி பச்சை நைவேத்தியம்: பாயஸம் குமாரியின் பெயர்: துர்கை மந்திரம்: ஓம் துர்காயை நம: சுவாசிநியின் பெயர்: மஹா கவுரீ மந்திரம்: ஓம் மஹா கவுர்யை நம: பலன் : எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். 9. கோலம் போடும் பொருள்: பச்சைக் கற்பூரம் கோல வகை: ஆயுதம் ஸ்நானத்திற்கு உரிய திரவியம்: புஷ்பம் கலந்த பரிமள நீர் தானம் : வைரம் பொட்டு: மை ராகம்: வஸந்தா வாத்தியம்: கோலாட்டம் மலர்: மருக்கொழுந்து நைவேத்தியம்: அக்கார அடிசில் குமாரியின் பெயர்: சுபத்ரா மந்திரம்: ஓம் சுபத்ராயை நம: சுவாசிநியின் பெயர்: ஸித்திதாத்ரீ மந்திரம்: ஓம் ஸித்திதாத்ரீயை நம: பலன் : விரும்பியதை பெறலாம்; மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அளிப்பாள்.
மேலும்
துளிகள் »
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ...
மேலும்
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ...
மேலும்
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ...
மேலும்
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ...
மேலும்
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ...
மேலும்
மேலும் செய்திகள் ...