பதிவு செய்த நாள்
10
அக்
2016
12:10
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட் டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோவில் தசரா திருவிழாவில், இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மகிஷாசூர சம்ஹாரம் நடக்கிறது. இதில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் மாறுவேடங்களுடன், குவிந்து வருகின்றனர். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோவில் தசரா திருவிழாவில், பல்வேறு திருக்கோலத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். தென் மாவட்டங்களில், பக்தர்கள் காப்பு கட்டி வீட்டை விட்டு வெளியே வந்து, கூடாரங்கள் அமைத்து தங்குவர். தினமும் ஒரு வேளை பச்சரிசி சாதமும், துவையலும் சாப்பிட்டு விரதம் இருப்பர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கும். இரவு, 12:00 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.