பழநி: நவராத்திரி விழாவில் சூரன்வதம் அம்புபோடும்நிகழ்ச்சிக்காக, பழநி மலைக்கோயில் சன்னதி நடை இன்று மதியம் 2:30மணிக்கு அடைக்கப்படுகிறது.
பழநியில் நவராத்திரி விழா அக்., 1ல் காப்பு கட்டுதலில் துவங்கி அக., 11வரை நடக்கிறது. இன்று விஜயதசமியை முன்னிட்டு அம்புபோடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக மலைக்கோயிலில் வழக்கமாக மாலை 5:30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை முன்னதாக மதியம் 1:30 மணிக்கு நடத்தப்படும். பராசக்திவேல் புறப்படான பின் மதியம் 2.30 மணிக்கு சன்னதி நடை சாத்தப்படும். பின், பராசக்திவேல் கோதைமங்கலம் சென்று அம்புபோடுதல், சூரன்வதம் நடக்கும்.