பதிவு செய்த நாள்
15
அக்
2016
10:10
திருப்பதி: திருமலையில், வெள்ளிக்கிழமை தோறும், கோ பூஜை நடத்தும் நடைமுறை துவங்கியது. திருமலையில் உள்ள, வராகசுவாமி விருந்தினர் மாளிகை எதிரே, கோசாலை அமைத்து, 50 பசுக்களை, தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. இங்கிருந்து பெறப்படும் பாலில் தான், ஏழுமலையானுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதனால், ஒவ்வொரு வெள்ளியன்றும் அதிகாலையில், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு, பூஜை செய்ய, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, திருமலையில் கோ பூஜை நடந்தது.