கர்நாடக மாநிலத்திலுள்ள நஞ்சன்கூடு கிராமத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. நஞ்சுண்டையா, நீலகண்டன் என்னும் திருநாமங்களைக் கொண்ட இவர், பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை அருந்தி உலகைக் காப்பாற்றியவர். இக்கோவிலில் தினமும் சுவாமிக்கு சுக்கு,நெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த சுகண்டித சர்க்கரை என்னும் கலவையை நைவேத்யம் செய்கின்றனர். இக்கோவிலில் ராஜகோபுரத்தை பார்த்தபடி கருங்கல் நந்தி ஒன்று உள்ளது. பக்தர்களை வரவேற்கும் விதத்தில், வாசலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி எப்போதும் அலங்காரத்துடன் இருப்பதால் அலங்கார நந்தி எனப்படுகிறது.