பதிவு செய்த நாள்
31
அக்
2016
02:10
கட்டாயம் செல்லலாம். பொதுவாக, சுபகாரியங்களுக்குச் செல்லும்போது ஏதாவது தடங்கலோ, அப சகுனமே ஏற்பட்டால் அதை மீறிச் செய்யக்கூடாது. ஆனால், பகவானை ஆராதனை செய்யப் போகும் போது இது மாதிரி தடங்கல் ஏற்படுகிறது என்றால், அதை மீறிச் செய்யலாம். அப்படி தடங்கல் வரத்தான் செய்யும். காரணம், நாம் செய்து வைத்த பாபங்களைப் போக்கிக்கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, அது போகாத படிக்கு சில தடைகள் வரும். ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி என்கிறது சாஸ்திரம். அப்படி என்றால், அந்தத் தடையை மீறித்தான் புண்ணியக் காரியங்களைச் செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, உள்ளூரில் உள்ள ஸ்வாமியை நாம் தரிசிக்கச் செல்லும்போது, தடை வந்தால் அதை மீறிச் செல்ல வேண்டும். வெளியூர்ப் பிரயாணம் செய்து போக வேண்டி வந்தால், அப்போது கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், அது ஸ்வாமியைத் தரிசிக்க மட்டுமல்ல, பிரயாணம் செய்வதற்கும் சேர்த்துத்தான். அப்படி பிரயாணம் செய்வதற்குத் தடை வந்தால், அந்தத் தடையை மீறிச் செல்வது சரியல்ல. எனவே கால தேசத்தை அனுமானித்து அதைச் செய்ய வேண்டும்.