Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டுக்கு 84 வயது! பூஜையறையில் தீபம் ஏற்றும் பலன்கள்! பூஜையறையில் தீபம் ஏற்றும் பலன்கள்!
முதல் பக்கம் » துளிகள்
துன்பங்கள் அனைத்தும் தீர்க்கும் சுந்தரகாண்டம்!
எழுத்தின் அளவு:
துன்பங்கள் அனைத்தும் தீர்க்கும் சுந்தரகாண்டம்!

பதிவு செய்த நாள்

01 நவ
2016
04:11

ஒரே நாளில் சுந்தரகாண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால்கூட விவரிக்கமுடியாது என்று உமா சம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒருசமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும். எந்த டாக்டராலும் அறை குணப்படுத்த இயலவில்லை என்றும் கூறினார். உடனே காஞ்சிப் பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும்முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்துவர, அவருக்கு வயிற்று வலி பறந்து போய்விட்டது. சுந்தரகாண்டத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும்; கஷ்டங்கள் தொலைந்து போகும். ஆஞ்சனேயருக்கு வடை வெண்ணெய் வைத்து நெய்தீபமேற்றி சுந்தரகாண்டம் படித்துவந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

ராமனுடன் மறுபடியும் வாழமுடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்தது சுந்தர காண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்கவேண்டும் என்கிறார்கள். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, சனி தசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்துவந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம். சுந்தரகாண்டத்தில், அனுமன், சீதையைக் கண்டுபிடிக்க அசோகவனத்துக்கு  செல்லும் முன்பு கூறிய சுலோகத்தைக் கூறிவந்தால் வெற்றிமீது வெற்றி உண்டாகும். சுந்தரகாண்டத்தை இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள். சுந்தரகாண்டத்தை எவரொருவர் ஆழமாகப் படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும். சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும். சுந்தரகாண்டம் படிக்கத் தொடங்கும்முன்பு, முதல் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விடவேண்டும். அதன்பிறகு சுந்தரகாண்டம் படிக்கவேண்டும் என்பது ஐதீகம். ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும். ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

சுந்தரகாண்டத்தை மனமுருகிப் படித்தால் பாவம் தீரும்; முடியாத செயல்கள் முடிந்துவிடும். கர்ப்பிணிகள் குறைந்தபட்சம் 5ஆவது மாதத்திலிருந்து சுந்தரகாண்டம் படித்துவந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனையுள்ளதாகப் பிறக்கும். சுந்தரகாண்ட பாராயணம், நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்துவிடும். சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம். சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாகப் படித்துவந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்துவிடும். சுந்தரகாண்டத்தில் 42ஆம் சர்க்கத்தில், 33வது சுலோகம் முதல் 37வது சுலோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும். சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவகிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். சுந்தரகாண்டம் படிப்பதன்மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெறமுடியும். சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்குமுன்பு சொன்ன சுலோகத்துக்கு ஜெயபஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லிவந்தால் வீட்டில் செல்வம் பெருகும். ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் ஒன்பது மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்துவந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம். சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள்கூட இடைவெளி விடாமல் படிக்கவேண்டும். சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்கக் கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கிடைக்கும். சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும். சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar