வீட்டு, பூஜையறையில் தீபம் ஏற்றும்போது எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன. ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்; இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகம் ஏற்றினால் புத்திரர் சுகம்; நான்கு முகம் ஏற்றினால் பசு, கன்று போன்ற கால்நடைச் செல்வம்; ஐந்து முகம் ஏற்றினால் சகலவிதமான செல்வங்களும் பெருகும்.