சுவாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடிய வாழைப் பழத்தின் ஊதுபத்தியை செருகக் கூடாது. அது
மிகவும் தோஷம். ஊதுபத்தியை வைப்பதற்கு இடம் இல்லை, அதனை பாதியாக உடைத்து
வைத்தால் பார்க்க அழகாக இருக்கிறது என்றெல்லாம் நம்மை அறியாமல் நாம்
மேற்கொண்டுவிட்ட கெட்ட பழக்கங்கள். ஒரு பழத்தை கண்டிப்பாக வீணாக்கக்
கூடாது. பழம் மட்டுமில்லை; அன்னம் கூட அப்படித் தான். அன்னம் ந நிந்த்யாத்
அதாவது, சாப்பிடும் உணவுப் பொருளை பகவானுக்கு சமர்ப்பணம் பண்ணலாம் அல்லது
நாம் சாப்பிடலாம். வேறு எந்த வகையிலும் அதனை வீணடிக்கக் கூடாது.