பதிவு செய்த நாள்
03
டிச
2016
02:12
சென்னை: மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நாளை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சென்னை அடுத்துள்ள, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, 1.41 கோடி ரூபாய் செலவில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து, நாளை காலை, 7:32 மணிக்கு மேல், 9:21 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி, அம்மனுக்கு, 33 குண்டங்கள் கொண்ட, உத்மபக்ஷ யாகசாலைகள்; பரிவார சன்னிதிகளுக்கு, தனி யாகசாலை அமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. டிச.,2 பூஜையில்,இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். கும்பாபிஷேகம் முடிந்து, நாளை காலை, 11:00 மணிக்கு மேல், பொதுமக்கள், அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.