வஜ்ர சரீரம் என்னும் உறுதியான உடல் வலிமை கொண்டவர் ஆஞ்சநேயர். அதனால் அவருக்கு பஜ்ராங்க் என்ற பெயருண்டு. அவரைப் போல ம னோதிடம், உடல்பலம், சமயோசிதம், நீண்ட ஆயுள் கொண்டவர்கள் உலகில் யாருமில்லை. அவருடைய அருளால் எல்லாம் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், பெரியவர்கள் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யும் போது, தீர்க்காயுஷ்மான் பவ! (நீண்ட ஆயுள் வாழ்க) என்று வாழ்த்தும் வழக்கம் உண்டானது.