ஆஞ்சநேயர் அருளால் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதை ராமாயண பாராயணத்தில் சொல்கிற பிரசித்தமான ஆஞ்ஜநேய ஸ்தோத்திரம் சொல்கிறது. புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹநுõமத் ஸ்மரணாத் பவேத்!! மனிதன் விரும்புவது புத்தி, வலிமை, தைரியம், கீர்த்தி, அஞ்சாமை ஆகியன. இவை அனுமனை வணங்குவதால் கிடைக்கிறது. அனுமன் யாரைக் கண்டும் அஞ்சமாட்டார். ராமதுõதனாக வந்த தனக்கு மரியாதை தராத ராவணன் முன்னால், அவனுக்கு இணையாக தன் வாலைச்சுருட்டி ஆசனமிட்டு அமர்ந்தான். அரோகதா என்றால்ஆரோக்கியம். அனுமனை வணங்குபவனுக்கு சிறந்த உடல்நிலை இருக்கும். அஜாட்யம் என்றால் சுறுசுறுப்பு. வாக் படுத்வம் என்றால் மற்றவர்களுக்கு நன்மைதரும் பேச்சுத்திறன். இவற்றையும் ஆஞ்சநேயரை வணங்குவோர் பெறுவர்.