நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2011 10:10
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா இன்று(13ம்தேதி) காலை 7.45மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று(13ம்தேதி) முதல் வரும் 27ம்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 7.45மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்று விழா நடக்கிறது.இதனைத் தொடர்ந்து இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தினமும் காலை 8 மணி மற்றும் இரவு 8மணிக்கும் அம்பாள் சன்னதியிலிருந்து காந்திமதி அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 22ம்தேதி இரவு ஒரு மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக காலை 5 மணிக்கு டவுன் காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைகிறது.23ம்தேதி மதியம் 12.10மணிக்கு கம்பை நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.24ம்தேதி அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4.30 திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 25ம்தேதி முதல் 27ம்தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது.இத்தகவலை நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளார்.