ஏரழிஞ்சில் என்ற மரத்தின் விதைகள் அந்த மரத்திலேயே ஒட்டிக்கொள்ளுமாம். அதுபோல, ஜீவாத்மாக்களாகிய நாம் பரப்பிரம்ம ஸ்வரூபத்துடன் ஒட்டிக் கொள்ள எப்பொழுதும் நமக்கு கடவுளைப் பற்றிய சிந்தனையே வேண்டும் என்று காஞ்சி பரமாச்சார்யார் சொல்லி இருக்கிறார். வில்வமரம், யானையின் முன்பக்கம் (முகம்) பசுவின் பின்பக்கம் இவைகளில் லக்ஷ்மிதேவி வாசம் செய்கிறாள். இவைகளை தொட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். ஸ்வாமி திருமுன் ஏற்றிய தீபத்தை சிறு துளி (சொட்டு) பால் கொண்டு சாந்தப்படுத்த வேண்டும். வாயால் ஊதி அணைக்கக் கூடாது. இடுப்பில் ஈரத்துணியுடன் இறைவனை வணங்கக் கூடாது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். பெண்கள் தலையில் முடிந்து இருக்கும் ஈரத்துண்டை அவிழ்த்து விட்டு வணங்க வேண்டும்.