Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அனுகூல மாதம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பதவி உயர்வு வருது
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பதவி உயர்வு வருது

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
03:01

கடமையைக் கண்ணாக மதிக்கும் தனுசு  ராசி அன்பர்களே!

கேதுவால்  மாதம் முழுவதும் நற்பலன்  கிடைக்கும்.  சுக்கிரன்  ஜன.27ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். செவ்வாயால் ஜன.16  வரை நன்மை தொடரும். குரு பகவான் ஜன.16ல் 11ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் பொருளாதார முன்னேற்றம்  உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு  கிடைக்கும். அவரது 7,9ம் இடத்துப் பார்வைகள் சாதகமான இடத்தில் விழுவதால் நன்மை அதிகரிக்கும்.  தடைகளை எளிதில் முறியடித்து செயலில் வெற்றி காண்பீர்கள். மாதத் தொடக்கத்தில் செவ்வாய் 3ம் இடத்தில் இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். சுக்கிரன் பலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே பாசம் மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  புதனால் குடும்ப பிரச்னை, உறவினர் வகையில் கருத்து வேறுபாடு,  பொருள் இழப்பு முதலியன ஜன.30க்கு பிறகு மறையும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி குறைவின்றி கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம்உண்டாகும்.  ஜன.25,26ல் பெண்கள் மூலம் நற்பலன் கிடைக்கும்.  ஜன.20,21ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிப்.1,2 ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஒதுங்கி இருக்கவும். உடல்நலம் சுமாராக இருக்கும். சூரியனால் கண் தொடர்பான உபாதை வரலாம்.  ஜன.16க்கு பிறகு பயணத்தின் போது  கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். கேது  சாதகமான நிலையில் இருப்பதால் எந்த பிற்போக்கான நிலையும் உருவாகாது. உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவர்.   ஜன.16க்கு பிறகு மறைமுகப்போட்டி குறுக்கிடலாம்.  ஜன.30க்கு பிறகு சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். ஜன.22,23,24,27,28,29ல் முயற்சியில் சிறுதடை குறுக்கிடலாம்.

பணியாளர்களுக்கு  வேலையில் இருந்த வீண் அலைச்சல், பணிச்சுமை ஆகியவை ஜன.30க்கு பிறகு மறையும். சுக்கிரனால் பணியிலக்கை விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும். ஜன.17,18,19ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். ஜன.16  வரை பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜன.16க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். இடமாற்ற பீதி முதலியன ஜன.30க்கு பிறகு மறையும்.

மாணவர்களுக்கு விடாமுயற்சியும், அக்கறையும் மிக அவசியம். பெற்றோர்,
ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நன்மையளிக்கும். ஜன.30க்குப் பிறகு வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் விரைவில் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு  போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவர். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்ரீதியான பயணம் செல்ல நேரிடும்.

விவசாயிகளுக்கு  எள், பனைப் பொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.  புதிய தொழில் நுட்பம் மூலம் விளைச்சலைப் பெருக்குவர். திட்டமிட்டபடி நவீன இயந்திரம் வாங்க
வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டுப்போன பொருள் ஜன.16க்குள் கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். ஜன.27க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். ஜன.30,31ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். பிப்.7,8ல் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன.17,18,19,20,21,25,26,30, 31, பிப்.5,6,7,8

கவன நாள்: ஜன.14, பிப்.9,10  சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 5,6  நிறம்:  வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: நவக்கிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள். செவ்வாயன்று முருகனை வணங்குங்கள்.  காக்கைக்கு அன்னமிடுங்கள்.  பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar