பதிவு செய்த நாள்
13
ஜன
2017
12:01
விருதுநகர்: விருதுநகர் மீசலுார் விலக்கில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் ஐம்பொன் விக்ரஹ பிரதிஷ்டைவிழா மற்றும் சத்யநாராயணா விரதபூஜை நடந்தன.
இதையொட்டி ஜன12 காலை 6:05 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன, லெட்சுமி, மஹாவிஷ்ணு, சாய்பாபா ஹோமங்கள் மற்றும் 108 சங்குபூஜை, பஞ்ச சூக்த பாராயணங்கள் நடந்தன. காலை 10:30 மணிக்கு உற்சவர் சாய்பாபா ஐம்பொன் விக்ரஹத்திற்கு விசேஷ கலசாபிஷேகத்தை சிவகாசி மீனாட்சிசுந்தரம் அய்யர் குழுவினர் செய்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தன. காலை 11:00 மணிக்கு அர்த்தமுள்ள ஆன்மிகம் எனும் தலைப்பில் ஜோதிடர் மது வெங்கடேஷன்பேசினார். பகல் ஆரத்தி நடந்தது. மாலை 4:05 மணிக்கு சத்யநாராயண பூஜையை விருதுநகர் சிவன்கோயில் பட்டர் பாலாஜி நடத்தினார். பகல், மாலை, இரவு ஆரத்தி முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது. கோயில் டிரஸ்டி ராகவன் நாயுடு மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.