சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த சிறந்த மாதம் தை. அவ்வாறு நடத்தும் போது சீதாராம கல்யாண பாடலைப் பாட வேண்டும். ராமன் பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). சீதாதேவி ராமனை விட்டு ராட்சஷ சக்தியால் பிரிந்தாள். பதிபக்தியால் மீண்டும் கணவனை அடைந்தாள். அதுபோல், உலக உயிர்களும் ராட்சஷ குணங்களுடன் கடவுளை நினைக்காமல் வாழ்கின்றனர். இந்தக் குணங்களைக் களைந்து, கடவுளே உண்மை என்ற தத்துவத்தை உணர வேண்டும். இதை உணர்த்தவே சீதாராம கல்யாணம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து கோவில்களில் சீதா கல்யாணம் நடத்தினால், திருமணத்தடை நீங்கும்.