தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் வெவ்வினைகள் யாவும் நீங்கும் என்பார்கள் பெரியோர்கள். அதேபோல், தை மாதத்துச் செவ்வாய் கிழமைகள் வீரபத்திர வழிபாட்டுக்கும் உகந்தவை. பொதுவாகவே இல்லங்களில் சுபிட்சம் நிறைந்திருக்கவும், தீவினைகள் யாவும் நீங்கவும் வருடம் முழுக்க செவ்வாய்க்கிழமைகள் வீரபத்திரரை வழிபட வேண்டும் என்று சொல்வார்கள். இயலாவிடில், தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளிலாவது வீரபத்திரை வழிபட்டு வரம் பெறலாம். இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.