பதிவு செய்த நாள்
21
ஜன
2017
02:01
108 திவ்யதேசங்களில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ., துõரத்திலுள்ள திருநாங்கூரில் திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், திருவண்புருடோத்தமம், செம்பொன் செய்கோவில், மணிமாடக்கோவில், வைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்ய தேசங்கள் உள்ளன., இவ்வூரைச் சுற்றி திருத்தேவனார்த் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து திவ்யதேசங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள திருவாலிதிருநகரி (ஆலிநாடு) என்ற ஊரில் இருந்துதான் திருமங்கையாழ்வார் ஆட்சி புரிந்தார். தை அமாவாசையன்று அவர் இங்குள்ள அழகியசிங்கர் கோவிலில் இருந்து புறப்பட்டு, 11 திவ்யதேசங்களுக்கும் செல்வார். அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் பெருமாள் கோவிலில், இந்த 11 பெருமாள்கோவில் உற்சவர்களும் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். இம்மூர்த்திகளை திருமங்கையாழ்வார் தனித்தனியாக வலம் வந்து, மாலை மரியாதை செய்து, மங்களாசாசனம் செய்யும் காட்சியைக் காணலாம். ஒரு சேர பதினொரு உற்சவர்கள் வீதியுலா வருவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.