பிரதோஷம் ஐந்து வகைப்படும் என்பதை முன்பே கூறியுள்ளோம். நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்பவை அவை. தினமும் மாலை 4:30 முதல் 6:00 மணி வரையிலான பொழுதுக்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். இந்த வேளையில் சிவபெருமானுக்கு நடக்கும் சாயரட்சை பூஜையைத் தரிசித்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.