எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் சிலருக்கு திருமணம் நடப்பது இல்லையே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2017 03:01
ஜாதகத்தில் மூன்றாம் இடத்திலோ அல்லது ஏழு, ஒன்பதாம் இடங்களிலோ பாபக் கிரகங்கள் இருந்தால் திருமணம் தடைப்படும். அந்த பாபக் கிரகங்களுடைய தசா புக்தியோ அந்தரங்கனோ நடந்தால் திருமணம் தடைபடும். நல்ல தசை நடக்கும் போது திருமணம் நிச்சயம் நடக்கும். சிலருடைய ஜாதங்களில்தான், அதாவது லட்சத்தில் ஒருவர் கோடியில் ஒருவருக்குத்தான் திருமண யோகம் என்பது இல்லாமல் இருக்கும். பெரும்பாலும் எல்லோருடைய ஜாதகங்களிலும் திருமண யோகம் இருக்கும். அந்தத் திருமண யோகத்தைக் கொடுக்கக்கூடிய காலம் வர வேண்டும் அல்லது தடை செய்யக்கூடிய கிரகங்களைக் கண்டறிந்து பரிகாரம் செய்வது விசேஷம். பிரச்சனையைத் தீர்க்கும்.