தானங்களில் மிகவும் உயர்ந்தது அன்னதானம். இதைச் செய்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பழநி தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில், பிப்.6,7ல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக அன்னதான குடில் ஒன்றை, குழந்தை வேலன் சன்னிதி அருகேயுள்ள எல்.என்.மகாலில் சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு அமைத்துள்ளது. அன்னதானம் வழங்க விரும்புபவர்கள், இந்த குடிலுக்கு வந்து பக்தர்களுக்கு உணவு வழங்கலாம். மருத்துவ முகாம், கூட்டு வழிபாடு, பஜனை ஆகியவையும் நடைபெறும். இப்பணியில் தொண்டராகவும் சேவையாற்றலாம். அலைபேசி: 99443 09719. 98421 98889.