Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை ... அன்னதானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்! அன்னதானம் செய்தால் ஆயுள் ...
முதல் பக்கம் » துளிகள்
வில்லனுக்கு ஒரு கோவில்!
எழுத்தின் அளவு:
வில்லனுக்கு ஒரு கோவில்!

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
03:01

என்னது... வில்லனுக்கு ஆலயமா என்று ஆச்சரியப்படுபவர்கள் ஏராளம்,  மகாபாரதத்தில் சகுனியின் பங்கு அதிகம். இவனும், துரியோதனனும் சேர்ந்து செய்த வில்லத்தனங்களை மறக்க முடியாது. இதில் முக்கிய வில்லனான சகுனிக்கு கேரளாவில் ஒரு கோவில் உள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை  அருகிலுள்ள பவித்ரீஸ்வரம் கிராமத்தில் மயம்கோட்டு மாலன்சரவு மலனாட என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சகுனி தான் பிரதான தெய்வம். தன் பாவங்களுக்காக மனம் வருந்திய சகுனி, இங்கு வந்து சிவனை பிரார்த்தித்ததாகவும், சிவன் சகுனிக்கு மோட்சம் அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது. இந்தக்கோவிலில் சகுனியின் அரியணை இருக்கிறது. இங்கு பூஜை எதுவும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இளநீர், கள், பட்டாடை வைத்து வணங்குகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் சகுனி வில்லனாக மாறினான் என கருதுபவர்கள் இவர்கள். பாண்டவர்களைத் தேடி சகுனி கவுரவர்களோடு வந்தான். அவர்களைக் கொல்வதற்காக இந்த இடத்தில் வைத்து, கவுரவர்கள் தங்கள் ஆயுதங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  அதனால் தான் இந்த இடத்திற்கு பகுத்தீஸ்வரம் என்று பெயர் வந்தது. அது மருவி பவித்ரீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிரந்த மூர்த்தி, புவனேஸ்வரி தேவி மற்றும் நாகராஜா விக்ரகங்கள் உள்ளன. இதன் அருகில் தான் துரியோதனனுக்கும் கோவில் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இந்தக்கோவில் 65 கி.மீ., துõரத்திலும், கொட்டாரக்கராவிலிருந்து 16 கி.மீ., துõரத்திலும் உள்ளது. பவித்ரீஸ்வரத்திற்கு பஸ் வசதி உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு உற்சவம் நடத்தப்படும். அப்போது பல வித்தியாசமான வழிபாடுகள் நடக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar