பதிவு செய்த நாள்
21
பிப்
2017
01:02
மதுரை: யா. நரசிங்கம் ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பக்குளம் எதிரில் அமைந்துள்ள உடையப்ப செட்டியார் கிரஷர் வளாகத்தில், 26.2.2017 ஞாயிற்றுக்கிழமை நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி மூலமந்திர மஹாயாகம் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெறுவதற்கு அக்னி வழிபாட்டின் மூலம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இந்த மகாயாகத்தில் அனைத்து தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவியர்களும், கட்டணமில்லாமல் மகாசங்கல்பம் செய்து தேர்வில் வெற்றிக்காக பிரார்த்திக்கப்படும். இந்த பிரார்த்தனையில் படிக்கும் குழந்தைகள் மட்டுமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ஹயக்ரீவ ஸ்வாமி வித்யாசரஸ்வதி மூலமந்திரத்தால் கிடைக்கும் பலன்கள்: குழந்தைகளுக்கு கல்வியில் மந்தநிலை நீங்கும்; ஞாபகசக்தி அதிகரிக்கும்; கல்வியில் நாட்டம் இல்லாத குழந்தைகள் ஆர்வம் கொள்வார்கள்; படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்; பரிட்சை நேரத்தில் ஏற்படும் பதட்டமும், பயமும் நீங்கி கவனம் ஒரு நிலைப்படும்; குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு அனுக்கிரஹம் கிடைக்கும்; குழந்தைகள் படிக்க நினைக்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். மகாயாகத்தில் வைக்கப்பட்ட பிரசாதம் வேண்டுவோர்க்கு ரூ.100/. ரூபாய் மட்டும் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சி நிரல்:
காலை: 10.00 மணிக்கு- புன்னியாக வாஸநம், மகாஸங்கல்பம்
காலை: 11.00 மணிக்கு- ஸ்ரீவித்யா சரஸ்வதிதேவி
ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை
காலை: 11.30 மணிக்கு- மகாயாகம் தொடக்கம்
மதியம்: 1.30 மணிக்கு- மஹாபூர்ணாஹுதி, தொடர்ச்சியாக சாற்றுமுறை, கோஷ்டி, மஹாயாகபிரசாதம் வழங்குதல்
தொடர்புக்கு:
ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட்
நிர்வாகக் கமிட்டி
ஏ.பி. ரகுபதி பெருந்தலைவர்
எஸ். அழகர் (எ) ஸ்ரீதர்பட்டர் நிறுவனர்/ மேனேஜிங் டிரஸ்டி/ செயலாளர்
வி.கோபால் தலைவர்
எஸ்.கோபாலபட்டர் பொருளாளர்
எஸ். சடகோபபட்டர் (எ) பாலாஜி, எஸ். வெங்கட்ராமன், என். வெங்கடேசன், டி. நாகராஜன், எஸ். மணிவண்ணன், ஆர்.கிரி வாத்தியார் (எ) கிருஷ்ணமூர்த்தி.
மொபைல்:98420 24866, 94882 14267